Normal view

There are new articles available, click to refresh the page.
Before yesterdayMain stream

Kanchi-LUG Weekly Discussion 08-09-2024 Summary & My Experiments : )

By: Hariharan
14 September 2024 at 19:49

Talk 0:
Topic : MiniDLNA media server.
Name : Syed Jafer

எமது பைத்தான் வகுப்பின் பயிற்றுனர் செய்யது ஜாபர் தன்னுடைய கணினியில் miniDLNA பல்லூடக வழங்கி (media server) நிறுவுதல் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரை வழங்கினார்.

அந்த பயன்பாட்டினை என்னுடைய உபுண்டு இயங்குதளத்தில் நிறுவியது குறித்து இப்பதிவில் காணலாம்.

எந்த பயன்பாட்டையும் உபுண்டு இயங்குதளத்தில் நிறுவல் செய்யவேண்டி இயங்குதளத்தினை நிகழ்நிலைப்படுத்தினேன் (updating)

sudo apt update

இயங்குதளத்தினை நிகழ்நிலைப்படுத்திய பிறகு

sudo apt install minidlna

நிறுவல் நல்லபடியாக முடிந்தது.

இப்பொழுது பல்லுடக வழங்கியைநமக்கு தேவைப்படும் படி கட்டமைத்துகொள்ளும் படிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

என்னுடைய கணிணியில் ஒரு பயனறே உள்ளபடியால் அவருக்கு மட்டும் நிறுவலைக் கட்டமைப்பு செய்வோம். பின்னர் பல்லூடக கோப்புகளின் இருப்பிடங்களை கட்டமைப்பு செய்வோம்.

எப்பொழுதும் கணினியில் கட்டமைவை மாற்றும் போது அதனை ஒரு காப்புபிரதி (backup) எடுத்து பயன்படுத்துதல் நன்று.

#media_dir=/var/lib/minidlna
media_dir=A,/home/hariharan/Music
media_dir=V,/home/hariharan/Videos
media_dir=P,/home/hariharan/Pictures
db_dir=/var/cache/minidlna

log_dir=/var/log/minidlna (create folder manually if not created automatically)

friendly_name=UbuntuMediaServer

மேற்கண்ட வரிகளில்

media_dir என்பது பல்லூடக கோப்புகளை வழங்கியில் காண்பிப்பதற்கான கட்டமைவு ஆகும்.

db_dir என்பது கோப்புகளின் பிற விவரங்களை சேமித்துவைக்க வழங்கி பயன்படுத்தும் கோப்புறை

log_dir என்பது வழங்கி பிழைச்செய்திமற்றும் பிற முக்கிய பயன்பாட்டின் நிகழ்வுகளை பதியும் கோப்புறை

friendly_name என்பது நமது வழங்கிக்கு நாம் வழங்கும் பெயர். பிற dlna நெறிமுறை மூலம் இயங்கும் பயன்பாடுகள் நமது வழங்கியை பயன்படுத்தும் போது இந்த பெயரின் கீழ் கோப்புகளை வழங்கும்.

எனது பரிசோதனைகள்

  1. MX Player – Android லிருந்து பல்லூடக வழங்கியை அணுகுதல்.

முடிவு: பல்லுடக வழங்கியை அனுகமுடியவில்லை.

  1. serveo.net பயன்படுத்தி பல்லூடக வழங்கியை அணுகுதல்.

முடிவு: பல்லூடக வழங்கியை அணுகமுடியவில்லை

❌
❌