Normal view

There are new articles available, click to refresh the page.
Before yesterdayMain stream

நான் என்னுடய உபுன்டு 20.04 இயக்கமுறையின் கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்

By: Hariharan
3 August 2024 at 19:30

இந்த பதிவில் நான் எவ்வாறு என்னுடைய உபுன்டு இயங்குதளத்தை மீட்டெடுத்தேன் என்பதை முடிந்தளவு எளிமையாக கூற முயற்சித்துள்ளேன்.

இன்று காலை சரியாக ஒரு பதினோரு மணி இருக்கும் லினக்ஸில் இருக்கும் சில கட்டளைகளை நினைவு கூறுவோமெ என கணினியை எடுத்து உபுன்டு பூட் செய்துவிட்டு உள்நுழைவு பக்கம் வரும் வரை காத்திருந்தேன்.

உள்நுழைவு பக்கம் வந்தது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு (Enter)ஐ அழுத்தினேன். தவறான பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் எனும் பிழைச் செய்தி வருவதை கண்டு அதிர்ந்தேன்.

நான் இந்த உபுண்டு இயக்கமுறையை பயன்படுத்தி சில வருடங்கள் இருக்கும் கடைசியாக இதனைப் பயன்படுத்தியது 2021 என்று நினைக்கிறேன்.

தவறான கடவுச்சொல் என்று வருகிறதே. சரி நாம் பொதுவாக பயன்படுத்தும் கடவுச்சொல் அனைத்தும் பயன்படுத்திவிட்டேன். ஒன்றும் பயனளிக்கவில்லை தோல்வியே மிஞ்சியது.

பின்னர் கடவுசொல்லை வேரு எங்காவது எழுதிவைத்தேனா? என்னும் கோணத்தில் தேடுதல் தொடர்ந்தது.

சில மணித்துளிகள் கழித்து….

நமது சுயமாக உருவாக்கப்பட்ட(selfmade) குழுவில் பதிவொன்று போட்டேன். பன்னிரண்டு மணியாகியும் பயனர்கள் யாரும் இணைப்பில் இல்லததால் பதில் கிடைக்குமா கிடைக்காதோ என்ற அச்சம் ஒரு பக்கம் இந்த உபுண்டு இயக்கமுறையுடன் ஒரு வின்டோஸு இயக்கமுறையும் ஒரு வன்வட்டில் மற்றான் சகோதரர்கள் போல இணைந்தே இருந்தது உபுண்டு இயக்கமுறையை அழித்து மீண்டும் நிறுவ வேண்டுமா என்ற கேள்வி மறுபக்கம்.

எழுந்தேன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு ஒவர்புலோவிலும்(stackoverflow) தீர்வை தேடினேன்.சரியான குறிச்சொற்கள்(keywords) பயன்படுத்தால் என்னவோ தீர்வு கிடைக்கவில்லை.

சரி நாம் புதிதாக இணைந்த லினக்ஸு குழுவிலும் (forums.tamillinuxcommunity.org) ஒரு பதிவை போட்டுவிடுவோம் எதாவது ஒரு இடத்தில் உதவி கிட்டும் என்ற நம்பிக்கையில் மதிய உணவு சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் கைப்பேசியில் இரு செய்தி வந்தது 📲

சுயமாக உருவான நண்பர் ஒருவர் ஒரு யுடியுப் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த கானொளியில் கூறப்பட்ட கட்டளை களை பயன்படுத்தி பார்த்தேன்.

உபுண்டு இயக்கமுறை மீட்டெடுக்கும் முறையில் (Recovery mode) இயக்குவதற்கான தேர்வுகள் திரையில் தோன்றவில்லை.சிறிது சிந்தித்து பார்த்ததில் இயக்குமுறை தொடக்கும் (GRUB)ல் பொதியில் சில மாற்றங்கலை செய்தது நினைவுக்கு வந்தது (கடவுச்சொல் மட்டும் ஏனோ வரவில்லை 🤦‍♂️) .

சரி அடுத்த செய்தியை பார்க்கலாம் என்று அடுத்த செய்தியை படித்தேன். அங்கு இயக்குமுறை தொடக்கும் பொதியில் இயக்குமுறையை தொடங்கும் கணத்திலேயே சில கட்டளைகளை மட்டுமே மாற்றி இயக்குமுறையை மீட்டெடுக்கும் கட்டளை இயக்கியை (Recovery Shell) திறக்கும் முறையை ஒரு யுடூப் பதிவாளர் எளிமையான தமிழில் கூறியிருந்தார்.

ஒரு வழியாக இரண்டாவது முயற்சி கை கொடுக்கவே. கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன். எனது மாற்றான் சகோதரனை (ubuntu) மீட்டெடுத்தேன்.

பின்னினைப்பு :

  1. உபுன்டு மீட்டெடுக்கும் முறை 1 (Recovery Mode) https://youtu.be/cijFUPL6wKA?si=6MJN6PpCFTnw2y18

2. உபுன்டு மீட்டெடுக்கும் முறை 2

(Recovery Shell opening GRUB Command Edit)

https://youtu.be/azvV6FxocZI

3.https://forums.tamillinuxcommunity.org/t/how-to-reset-ubuntu-20-04-forgotten-root-password/2321

குறிப்பு:

லினக்ஸு கடவுச்சொல்லை மாற்றியமைக்க மேலெ கொடுக்கப்பட்ட இணைப்புகளில் இருக்கும் கட்டளைகளை இயக்கும்போது மிகுந்த கவனத்தோடு இயக்கவேண்டும்.நீங்கள் அறியாமல் கட்டளைகளில் தவறு செய்ய நேரிட்டால் நீங்கள் தரவுகளை இழக்ககூடும்.

❌
❌