Ubuntu : How to make partitions mount at startup -தமிழில்
அக் 01, 2024
உபுண்டு இயக்கமுறையில் வன்வட்டு மற்றும் திடநிலைவட்டினை இயங்குதளத்தின் தொடக்கத்தில் இணைப்பது எவ்வாறு என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.
பயனர் இடைமுக வழி (புதிய பயனர்களுக்கு) : வட்டுகள் (Disks) எனும் பயன்பாடானது தானமைவாகவே
/etc/fstab
கோப்பினை நமக்காக திருத்தி நமது தேவைக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது (இயங்குதளத்தினை உடைக்காமல்).
வட்டுகள் (Disks) பயன்பாட்டினை பயன்பாட்டு ஏவி (launcher) துணைகொண்டு இயக்க (disks) என பயன்பாட்டு ஏவியில் தேடவும்.
மேற்கண்ட துவக்கபட்டியில் காட்டபட்டுள்ளது போல வட்டுக்கள்(Disks) பயன்பாடு தோன்றும். அந்தப் பயன்பாட்டினை திறக்கையில் கீழே காட்டபட்டுள்ளது போல பட்டியலிடப்பட்டு வன்வட்டுக்களும் திடநிலை வட்டுக்களும் தோன்றும்.
நான் இரண்டாவது வன்வட்டினை சொடுக்குகையில் அதில் உள்ள வன்வட்டின் பகுதிகள் (Partitions) திரையில் காட்டப்படும்.
அதில் நாம் தானமைவாக இணையக்கூடிய அமைப்பை கட்டமைக்க அந்த வட்டினை தேர்வு செய்து இணைக்கவேண்டிய பகுதியையும் தெரிவு செய்துகொள்ளவேண்டும்.
அப்போது வன்வட்டின் பகுதிகளின் கீழ் ஒரு மூன்று தேர்வுகள் தோன்றும்.
முதல் தேர்வு – இயங்குதளத்தில் இணை (Mount)
இரண்டாம் தேர்வு – பகுதியை நீக்கு (Delete Partition) (தேர்வினை தேர்வுசெய்துவிடாதீர்கள் வன்வட்டின் அந்தபகுதியில் உள்ள தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு ஒதுக்கப்படாத நினைவிடமாக மாற்றப்பபட்டுவிடும்)
மூன்றாம் தேர்வு – பிற அமைப்புகளை இந்த தெரிவில் காணலாம்.
மூன்றாவது தேர்வினை சொடுக்கினால் ஒரு சுறுக்குப்பட்டி(Context Menu) விரியும் அதில் இணைக்கும் தெரிவுகளை திருத்து (Edit Mount Options) எனும் தொடுப்பை அழுத்தினால் இணைக்கும் தெரிவுகள் உரையாடல் பெட்டி(Dialog Box) தோன்றும்.
இணைக்கும் தெரிவுகள் உரையாடல் பெட்டியில் இருப்பவை எல்லாம் பயன்படுத்தா இயலா நிலையில் (grayed out) காட்சியளிக்கும்.
இதனைப் பயன்படுத்தும் நிலைக்கு கொணற பயனை அமர்வு இயல்புநிலை (User Session Default) அமைப்புகளை மாற்று பொத்தான் (toggle button) பயன்படுத்தி மாற்றும் போது எல்லா அமைப்புகளும் திருத்தகக் கூடிய நிலையில் மாறிவிடும். பின்னர் அதனை சேமித்தால் அந்த வன்வட்டின் பகுதி தானமைவாகவே இயங்குதளத்தின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
நன்றி
அடுக்கு பரிமாற்றம் (stack exchange) : https://askubuntu.com/questions/164926/how-to-make-partitions-mount-at-startup
முனையத்தில் பகுதிகளை இணைக்கும் வழிமுறையை மற்றொரு பதிவில் காணலாம்.