Docker : Virtual Machines – மெய்நிகர் இயந்திரங்கள்
செப் 25, 2024
ஒரு கணிணியில் ஒரு வலைப்பயன்பாடினை இயங்குவதற்கு 4 பயன்பாடுகள் பயன்படுத்த வேண்டுமெனில் அந்த பயன்பாடு இயக்கத்திற்காக சார்ந்திருக்கும் நுண்செயலி(CPU), நினைவகம்(RAM), சேமிப்பக (Storage) போன்ற வன்பொருள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதே தேவைகளை சில சமயங்களில் பயனர்களின் (Users) எண்ணிக்கைக்கு ஏற்றவாறும் பயன்பாட்டின் அளவுகளுக்கு (Usage) ஏற்றவாறு நாம் அதிகப்படுத்த (Scaling) வேண்டியுமுள்ளது.
ஓரே கணிணியில் அதிகளவு பயனர்களின் அணுகல்களை அனுமதித்தால் அதிகபயன்பாட்டின் காரணமாக வலைதளங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.இதனை தவிர்க்க தனித்தனி இயந்திரங்களை பயன்படுத்தும் போது தேவைக்கு அதிகமாக வன்பொருள் மீதமிருக்கும் அது முழுவதுமாக பயன்படுத்தப் படாமலும் இருக்கும் (proper utilisation).
எடுத்துக்காட்டாக கீழ்வரும் 4 பயன்பாடுகளை
- அப்பாச்சி வலை சேவையகம்
- கிராப் கிகுவெல் எந்திரம்
- போஸ்டுகிறீஸ் தரவுதள அமைப்பு
- எக்ஸ்பிரஸ் வலைச் சேவையகம்
ஒரு கணிணியில் இயக்குவற்கு 4 GB (RAM), 2 Core (CPU) மற்றும் 250 GB (Storage) தேவைப்படும் என வைத்துக்கொள்வோம்.
நம்மிடம் 16 GB (RAM), 16 Core (CPU) மற்றும் 1000 GB கொண்ட கணினி உள்ளது அதில் இரண்டு நிறுவல்களை அமைத்து சோதணை செய்து பார்க்க மெய்நிகர் இயந்திரங்கள் கருத்துரு வழிவகை செய்கிறது.
ஆகவே ஒரு கணினியில் வன்பொருள் அமைப்புகளை தேவைகளைப் பொறுத்து ஒரு கணினியை பல கணினிகளாக மாற்றி சோதனை செய்து பயன்படுத்தும்போது அந்த கணிணிகளை மெய்நிகர் இயந்திரங்கள் எனப் பொருள் கொள்ளலாம்.