Normal view

There are new articles available, click to refresh the page.
Before yesterdayMain stream

Keyboard Tamil99 :தேடிய விசைப்பலகை பயிற்சி வலைதளம் கிடைத்தது.

By: Hariharan
5 October 2024 at 18:09

அக் 5, 2024

தமிழில் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும். முதலில் இருந்தே எகலப்பை மற்றும் தமிழ் பொனெட்டிக்(ஒலிப்பு) விசைப்பலகையில் தமிழில் தட்டச்சு செய்ய பழகிய என்னை போன்றவர்களுக்கு தமிழ் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயிற்சி எடுக்க மிகவும் கடினமாக இருக்கிறது.

ஆகவே இந்த சிக்கலை தீர்க்க எதேனும் வலைதளங்கள் இருக்கின்றனவா என தேடிய பொழுது கிடைத்த ஒர் வலைதளம்.

https://wk.w3tamil.com/

இந்த வலைதளத்தில் தமிழ்99 விசைப்பலகையை பயிற்சி பெற 3 வித அமைப்புகள் உள்ளன.

முதல் அமைப்பு தமிழ்99 விசைப்பலகை மட்டும் வைத்துகொள்வது. இதில் வடமொழி மற்றும் ஆங்கில எழுத்துகள் இருக்காது.

இரண்டாம் அமைப்பு தமிழ்99 விசைப்பலகை வடமொழி எழுத்துகள் உடன் ஆங்கில எழுத்துகளும் லேசான நிறத்தில் தோன்றும் வடமொழி எழுத்துகளை தட்டச்சு செய்ய {shift} விசையை பயன்படுத்தவும்.

மூன்றாம் அமைப்பு தமிழ்99 விசைப்பலகை வடமொழி எழுத்துகள் உடன் ஆங்கில எழுத்துகளும் அடர் நிறத்தில் தோன்றும் .

தொடக்க பயனர்கள் மூன்றாம் அமைப்பை பயன்படுத்தலாம் எளிமையாக ஆங்கில எழுத்துக்களின் விசையை பயன்படுத்தி பழகலாம் பின்னர் நன்கு பயிற்சி பெற்றபின் முதலாம் அமைப்பிற்கு வரலாம்.

வாங்க பழகலாம் தமிழ்99!

❌
❌