Reading view

There are new articles available, click to refresh the page.

How to Create & Publish a PHP Package with Composer? – தமிழில்

அக், 13 2024

பிஹெச்பி பொதிகளை பிஹெச்பி கம்போசர்-உடன் உருவாக்க மற்றும் வெளியிடுவது ஒரு நேரடியான வழிமுறை இந்த வழிமுறையை பின்பற்றினால் நாம் எளிமையாக பிஹெச்பி சமூகத்துடன் நமது நிரல்களை பொதிவடிவத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.

கம்போசர் – (பிஹெச்பி சார்புகளின் நிர்வாகி) – PHP Dependency Manager

தேவையானவை:

உங்களது கணினியில் பின்வருவற்றை நிறுவி இருப்பது அவசியம்.

  • பிஹெச்பி (பதிப்பு 7.4 or அண்மை)
  • கம்பொசர் (அண்மை பதிப்பு)
  • கிட் (அண்மை பதிப்பு)
  • ஒரு கிட் ஹப் கணக்கு
  • பேக்கஜிஸ்ட் கணக்கு

படிகள்:

படி 1: நம்முடைய பொதிக்கான ஒரு கோப்புறையை உருவாக்கி கொள்ளவும்.

mkdir open-tamil
cd open-tamil

படி 2: கம்போசர் பொதியை துவக்குதல்

நம் கணினியில் கம்போசர் பொதியை துவக்க பின்வரும் கட்டளையை பயன்படுத்தவும்.

composer init

மேற்கண்ட கட்டளையை பயன்படுத்தும் கட்டளைவரி இடைமுகம் பின்வரும் கேள்விகளை கேட்கும்

Package name: your-username/my-php-package

Description: A sample PHP package

Author: Your Name <your-email@example.com>

Minimum Stability: stable (or leave blank)

Package Type: library

License: MIT

இந்த கேள்விகளுக்கு விடையளித்த பின்பு பிறசார்புகளை கேட்கும் no கொடுக்கவும்.

இறுதியாக composer.json உருவாக்க தூண்டியில் yes கொடுத்து உருவாக்கி கொள்ளவும்.

படி 3 :

composer.json கோப்பு உருவாக்கிய பிறகு அது பின்வருமாறு தோன்றும்

{
    "name": "your-username/my-php-package",
    "description": "A sample PHP package",
    "type": "library",
    "require": {
        "php": ">=7.4"
    },
    "autoload": {
        "psr-4": {
            "MyPackage\\": "src/"
        }
    },
    "authors": [
        {
            "name": "Your Name",
            "email": "your-email@example.com"
        }
    ],
    "license": "MIT"
}

படி 4

பின்னர் உங்களது குறிமுறையை கிட் பயன்படுத்தி கிட்ஹப்பில் பதிவேற்றவும்.

படி 5

குறியீட்டை கம்போசரில் பதிப்பிக்க பேக்கேஜிஸ்டில் உள்நுழையவும். பின்னர் submit பொத்தானை அழுத்தவும்

submit பொத்தானை அழுத்தியவுடன் பொதியை எற்றும் பக்கம் திறக்கப்பட்டு உங்களது கிட்ஹப் கணக்கில் உள்ள பொதுவாக அனுமதியில் இருக்ககூடிய ரெபொசிடரியின் வலைமுகவரியை உள்ளிட்டு சரிபார்க்கும் பொத்தானை அழுத்தி சரிபார்த்துகொள்ளவும்.

குறிப்பு : கம்போசரை பொறுத்தவகையில் பதிப்பிப்பவர் வென்டார் (vendor) என்று குறிப்பிடப்படுவர். நான் hariharan என்ற வென்டார் பெயரை பயன்படுத்தி இரு பொதிகளை பதிப்பித்துள்ளேன்.

புதிய பொதியை சரிபார்த்த பின் பொதியானது பதிப்பிக்க தயராகிவிடும்.

பார்க்க :

https://packagist.org/packages/hariharan/open-tamil

https://packagist.org/packages/hariharan/thirukural

நிறுவி பார்க்க:

composer require hariharan/thirukural

composer require hariharan/open-tamil

❌