காஞ்சிபுரம் லினக்ஸ் பயனர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுபடுவதாக திரு. பரமேஸ்வர் அருணாச்சலம் அவர்கள் வாராந்திர கூட்டத்திலும் ,மடல் பட்டியலிலும் அறிவித்திருந்தார்.
நான் காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவில் இணைந்ததில் இருந்து பரமேஸ்வர் அவர்கள் சிறப்பாக வாராந்திர மற்றும் மாதாந்திர கூட்டத்தினை நடத்திவந்தார்.
வரும் வாரங்களில் அவரைப் போலவே சிறப்பாக வாரந்திர மற்றும் மாதாந்திர கூட்டங்களை நடத்தும் ஒருங்கிணைப்பாளராக நான் பொறுபேற்றுக்கொள்ள இருக்கிறேன்.
சில பொறுப்புகளை ஏற்று நடத்துதலில் நல்ல நிர்வாக திறனை பெறலாம். அப்படி நான் கற்பனவற்றையும் எழுதுகிறேன் வலைப்பதிவுகளாக…
உங்களுக்கு உங்களுடைய ftp வழங்கியின் கடவுச்சொல் செயல்பாடு அளவில் (process level) பிற பயனர்களுக்கு தெரியாமல் இருக்க .netrc கோப்பில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை காட்டாமல் பயன்படுத்தலாம்.
~/.netrc எனும் கோப்பினை உங்களது விருப்ப உரைதொகுப்பியில் திறக்கவும். கோப்பு இல்லையேல் புதியதொன்றை உருவாக்கிகொள்ளவும்.
கோப்பினில் மேற்கண்டவாறு ftp தளத்தின் பெயர் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை சேமித்துக்கொள்ளவும்.
கோப்பு ஆனது 600 அனுமதி கொண்டிருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். உங்களது கடவுச்சொல் வெறும் உரையாக சேமிக்கப்பட்டிருக்கிறது. பிற பயனர்களின் தேவையற்ற அனுகலை இது தடுக்கிறது.
FTP : கோப்பு அனுப்பும் நெறிமுறை plain text ஆக இருப்பதால் அதில் நீங்கள் பெரிய பாதுகாப்பை எதிர்ப்பார்க்க முடியாது உங்களுடைய திறன்பேசியின் hotspot , வீட்டில் இருக்கும் wifi மூலமாக மட்டுமே அணுகுவீர்கள் எனில் நல்லது.
FTPS : கோப்பு அனுப்பும் நெறிமுறை பாதுகாக்கப்பட்டது இதில் மறைப்பாக்கம் (encryption) மூலம் பாதுகாக்கப்படுவதால் ftp யை விட சற்று பாதுகாப்பானது
SFTP : பாதுகாப்பான கோப்பு பரிமாற்ற நெறிமுறை ஆனது sshன் மறைப்பக்க யுக்திகளை பின்பற்றுவதால் மேற்சொன்ன மூன்றில் இது அதிக பாதுகாப்பினை வழங்குகிறது.
பிஹெச்பி பொதிகளை பிஹெச்பி கம்போசர்-உடன் உருவாக்க மற்றும் வெளியிடுவது ஒரு நேரடியான வழிமுறை இந்த வழிமுறையை பின்பற்றினால் நாம் எளிமையாக பிஹெச்பி சமூகத்துடன் நமது நிரல்களை பொதிவடிவத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.
பின்னர் உங்களது குறிமுறையை கிட் பயன்படுத்தி கிட்ஹப்பில் பதிவேற்றவும்.
படி 5
குறியீட்டை கம்போசரில் பதிப்பிக்க பேக்கேஜிஸ்டில் உள்நுழையவும். பின்னர் submit பொத்தானை அழுத்தவும்
submit பொத்தானை அழுத்தியவுடன் பொதியை எற்றும் பக்கம் திறக்கப்பட்டு உங்களது கிட்ஹப் கணக்கில் உள்ள பொதுவாக அனுமதியில் இருக்ககூடிய ரெபொசிடரியின் வலைமுகவரியை உள்ளிட்டு சரிபார்க்கும் பொத்தானை அழுத்தி சரிபார்த்துகொள்ளவும்.
குறிப்பு : கம்போசரை பொறுத்தவகையில் பதிப்பிப்பவர் வென்டார் (vendor) என்று குறிப்பிடப்படுவர். நான் hariharan என்ற வென்டார் பெயரை பயன்படுத்தி இரு பொதிகளை பதிப்பித்துள்ளேன்.
புதிய பொதியை சரிபார்த்த பின் பொதியானது பதிப்பிக்க தயராகிவிடும்.
அண்மையில் நான் டூயல் பூட் முறையில் விண்டோசுடன் நிறுவிய அனுபவத்தினை இந்த பதிவில் காணலாம்.
நான் SSDல் விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்திவருகிறேன். என்னுடைய இன்னொரு HDDல் உபுன்டு இயங்குதளம் வைத்திருக்கிறேன். அந்த வன்வட்டு பழுதடையும் தருவாயில் இருப்பதால் SSDல் உபுண்டு இயங்குதளம் நிறுவ தயாரானேன்.
எப்பொழுதும் புதிய இயங்குதளம் நிறுவ தாயராகும் போது காப்பு பிரதி(Backup) எடுத்துவைத்து தயாராகவும்.
குறிப்பு : நான் இயங்குதளம் 3 முறை நிறுவியுள்ள அனுபவத்தில் காப்பு பிரதி எடுக்காமல் தொடங்கினேன். ஆனால் இவ்வாறு செய்வது பரிந்துரைக்கபடவில்லை.
நான் லைவ் USB ventoy எனும் மென்பொருளின் உதவியுடன் தயார் செய்தேன்.
இரவு ஒரு 10: 35 மணி இருக்கும் கணினியை திறந்து லாகின் செய்து விட்டு குரோமியம் உலவியில் தமிழ் லினக்ஸ் பாரத்தில் போட்ட கேள்விக்கு பதில் வந்ததா என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
பார்த்துகொண்டிருக்கும் போது ஜேசன் அவர்களின் பதிவு தந்தி(Telegram App)யில் வந்தது. அதில் A2D நந்தா அவர்களின் CDK Offers மற்றும் CDKLabs பற்றிய சில செய்திகள் வந்தது. அவற்றையெல்லம் பார்த்துவிட்டு கணினியில் சுட்டியை சொடுக்கினேன் செய்தேன். எதற்கும் ஒத்துழைக்க வில்லை ஆனால் சுட்டி மட்டும் நகர்ந்தது. விசைப்பலகையை தட்டி டெர்மினலில் எதேனும் கட்டளைகளை பயன்படுத்தி குரோமியத்தினை நிறுத்திவிட்டு மீள் தொடங்கலாம் என நினைத்தேன். ஆனால் விசைகள் இயங்கின அதனுடைய உள்ளீட்டை கணிணி ஏற்கவில்லை.
திறன்பேசியில் தேடினேன்.
ரெடிட்டில் ஒரு பதிவு கிடைத்தது. அதில் குறிப்பிட்ட படி ctrl+alt+F3 யை அழுத்தினேன். பின்னர்
sudo systemctl status gdm
கட்டளையிட்டேன் (inactive) நிலையில் இருந்தது. பின்னர் நான் lightdm பயன்படுத்துவதால் அதனுய நிலையை சரிபார்த்தேன்.
sudo systemctl status lightdm
அது இயக்கத்தில் இருந்தது. lightdm ஐ மீள்தொடக்கம் செய்தேன். பின்வரும் கட்டளை கொண்டு
sudo systemctl restart lightdm
மீள் தொடக்கம் செய்ததும் விசைப்பலகை சரியாக இயங்கியது. சுட்டியும் நன்றாக இயங்கியது.
Notes on Choosing HDD to SSD Linux Installation migration
Chat GPT Prompt : how to backup current linux installation configuration files and packages list as a archive and apply on a new installation
Result
Backing up your current Linux installation’s configuration files and package lists is a great way to ensure you can easily restore or replicate your setup on a new installation. Here’s how you can do it:
Step 1: Backup Configuration Files
Identify Configuration Files: Most configuration files are located in /etc. You may also have application-specific configurations in your home directory (like .bashrc, .vimrc, etc.).
Create an Archive: You can create a compressed archive (like a tarball) of your configuration files. Run the following command:
sudo tar -czvf config_backup.tar.gz /etc /home/your_username/.bashrc /home/your_username/.vimrc
Adjust the paths based on what configuration files you want to back up.
Step 2: Backup Installed Packages List
The method to back up the installed package list depends on your Linux distribution.
After restoring everything, it’s a good idea to reboot your system to ensure all configurations take effect.
Notes:
Make sure to review any new configurations or installed packages after the restoration, as dependencies and versions may vary.
For user-specific configurations, you may want to back up the entire home directory or specific application directories.
This process should help you smoothly transition to a new Linux installation with your desired configurations and packages!
Chat GPT Prompt : I am in a plan of migrating linux os to a new file system which is xfs or zfs brtfs which on is good
Choosing between XFS, ZFS, and Btrfs depends on your specific needs and use cases. Here’s a breakdown of each file system’s strengths and considerations to help you decide:
XFS
Pros:
Performance: Excellent performance, especially for large files and high-performance workloads.
Scalability: Designed for scalability, making it suitable for high-capacity storage systems.
Mature: A well-established file system with a long history of stability.
Cons:
Features: Lacks some advanced features like snapshots and built-in RAID compared to ZFS and Btrfs.
Management: Does not have as many management tools as ZFS.
ZFS
Pros:
Data Integrity: Strong focus on data integrity with built-in checksumming.
Snapshots and Clones: Supports efficient snapshots and clones, allowing for easy backups and recovery.
Compression: Offers built-in compression options, which can save space.
RAID: Supports various RAID levels natively (ZRAID), enhancing redundancy.
Cons:
Memory Usage: Can require more RAM for optimal performance.
Complexity: More complex to set up and manage compared to traditional file systems.
Btrfs
Pros:
Snapshots and Subvolumes: Supports snapshots and subvolumes, making it flexible for backups and system management.
Built-in RAID: Offers support for multiple RAID levels.
Compression and Deduplication: Supports on-the-fly compression and deduplication.
Cons:
Stability: Still considered less mature than XFS and ZFS; while it has improved significantly, it may not be as stable for all workloads.
Performance: Can have variable performance depending on the workload and configuration.
Recommendations
For General Use: If you want stability and performance for general workloads, XFS is a great choice.
For Data Integrity and Advanced Features: If data integrity, snapshots, and advanced features are critical, ZFS is likely the best option.
For Flexibility and Modern Features: If you want modern features like snapshots and subvolumes with some flexibility, consider Btrfs.
Final Thoughts
Evaluate your specific use cases (e.g., data integrity, performance, ease of management) and the resources available on your system (e.g., RAM for ZFS). If possible, testing each file system in a non-production environment can also help you determine which one best meets your needs.
Dev.to Forbidden recovery procedure Forbidden Your account has been suspended and has limited access. Your ability to post and comment may be limited. For more information, you may send a message to support@dev.to.
தமிழில் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும். முதலில் இருந்தே எகலப்பை மற்றும் தமிழ் பொனெட்டிக்(ஒலிப்பு) விசைப்பலகையில் தமிழில் தட்டச்சு செய்ய பழகிய என்னை போன்றவர்களுக்கு தமிழ் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயிற்சி எடுக்க மிகவும் கடினமாக இருக்கிறது.
ஆகவே இந்த சிக்கலை தீர்க்க எதேனும் வலைதளங்கள் இருக்கின்றனவா என தேடிய பொழுது கிடைத்த ஒர் வலைதளம்.
இந்த வலைதளத்தில் தமிழ்99 விசைப்பலகையை பயிற்சி பெற 3 வித அமைப்புகள் உள்ளன.
முதல் அமைப்பு தமிழ்99 விசைப்பலகை மட்டும் வைத்துகொள்வது. இதில் வடமொழி மற்றும் ஆங்கில எழுத்துகள் இருக்காது.
இரண்டாம் அமைப்பு தமிழ்99 விசைப்பலகை வடமொழி எழுத்துகள் உடன் ஆங்கில எழுத்துகளும் லேசான நிறத்தில் தோன்றும் வடமொழி எழுத்துகளை தட்டச்சு செய்ய {shift} விசையை பயன்படுத்தவும்.
மூன்றாம் அமைப்பு தமிழ்99 விசைப்பலகை வடமொழி எழுத்துகள் உடன் ஆங்கில எழுத்துகளும் அடர் நிறத்தில் தோன்றும் .
தொடக்க பயனர்கள் மூன்றாம் அமைப்பை பயன்படுத்தலாம் எளிமையாக ஆங்கில எழுத்துக்களின் விசையை பயன்படுத்தி பழகலாம் பின்னர் நன்கு பயிற்சி பெற்றபின் முதலாம் அமைப்பிற்கு வரலாம்.
வட்டுகள் (Disks) பயன்பாட்டினை பயன்பாட்டு ஏவி (launcher) துணைகொண்டு இயக்க (disks) என பயன்பாட்டு ஏவியில் தேடவும்.
மேற்கண்ட துவக்கபட்டியில் காட்டபட்டுள்ளது போல வட்டுக்கள்(Disks) பயன்பாடு தோன்றும். அந்தப் பயன்பாட்டினை திறக்கையில் கீழே காட்டபட்டுள்ளது போல பட்டியலிடப்பட்டு வன்வட்டுக்களும் திடநிலை வட்டுக்களும் தோன்றும்.
நான் இரண்டாவது வன்வட்டினை சொடுக்குகையில் அதில் உள்ள வன்வட்டின் பகுதிகள் (Partitions) திரையில் காட்டப்படும்.
அதில் நாம் தானமைவாக இணையக்கூடிய அமைப்பை கட்டமைக்க அந்த வட்டினை தேர்வு செய்து இணைக்கவேண்டிய பகுதியையும் தெரிவு செய்துகொள்ளவேண்டும்.
அப்போது வன்வட்டின் பகுதிகளின் கீழ் ஒரு மூன்று தேர்வுகள் தோன்றும்.
முதல் தேர்வு – இயங்குதளத்தில் இணை (Mount)
இரண்டாம் தேர்வு – பகுதியை நீக்கு (Delete Partition) (தேர்வினை தேர்வுசெய்துவிடாதீர்கள் வன்வட்டின் அந்தபகுதியில் உள்ள தரவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு ஒதுக்கப்படாத நினைவிடமாக மாற்றப்பபட்டுவிடும்)
மூன்றாம் தேர்வு – பிற அமைப்புகளை இந்த தெரிவில் காணலாம்.
மூன்றாவது தேர்வினை சொடுக்கினால் ஒரு சுறுக்குப்பட்டி(Context Menu) விரியும் அதில் இணைக்கும் தெரிவுகளை திருத்து (Edit Mount Options) எனும் தொடுப்பை அழுத்தினால் இணைக்கும் தெரிவுகள் உரையாடல் பெட்டி(Dialog Box) தோன்றும்.
இணைக்கும் தெரிவுகள் உரையாடல் பெட்டியில் இருப்பவை எல்லாம் பயன்படுத்தா இயலா நிலையில் (grayed out) காட்சியளிக்கும்.
இதனைப் பயன்படுத்தும் நிலைக்கு கொணற பயனை அமர்வு இயல்புநிலை (User Session Default) அமைப்புகளை மாற்று பொத்தான் (toggle button) பயன்படுத்தி மாற்றும் போது எல்லா அமைப்புகளும் திருத்தகக் கூடிய நிலையில் மாறிவிடும். பின்னர் அதனை சேமித்தால் அந்த வன்வட்டின் பகுதி தானமைவாகவே இயங்குதளத்தின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டுவிடும்.
நான் டாக்கர் வகுப்பில் கற்றவற்றை வைத்து ஒரு டாக்கர் படத்தை டாக்கர் ஹப்பில் பதிவேற்றுதல் வரை நடந்த செயல்பாடுகளை இந்தப்பதிவில் குறிப்பிடுகிறேன்.
டாக்கர் ஹப் கணக்கை துவக்குதல்
https://app.docker.com/signup இணைப்பை சொடுக்கவும் அதில் கூகுள் கணக்கை வைத்து (நீங்கள் பிற உள்நுழைவு அமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்) உள்நுழையவும்.
வெற்றிகரமான உள்நுழைவுக்கு பிறகு https://hub.docker.com க்கு Docker Hub Link ஐ சொடுக்குவதுமூலம் செல்லவும்.
Click the Docker Hub Link
டாக்கர் ஹப்பில் நாம் படத்தை பதிவேற்றம் செய்யும் முன்னர் அதனை பதிவேற்ற ஒரு கோப்புறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
கோப்புறைஐ உருவாக்கிய பிறகு நாம் நமது கணினியில் டாக்கர் படத்தை உருவாக்கிய பின்னர் அதனை பதிவேற்றிக்கொள்ளலாம்.
கணிணியில் ஒரு டாக்கர் படத்தை உருவாக்குதல்
முதலில் டாக்கர் படத்தை உருவாக்கும் முன்னர் பழைய டாக்கர் கலன்களின் (Container) இயக்கத்தை நிறுத்திவிட்டு சற்று நினைவத்தினை தயார் செய்து கொள்கிறேன் (நினைவக பற்றாக்குறை இருப்பதால்).
docker rm $(docker ps -aq)
பின்னர் Dockerfile எழுத துவங்க வேண்டியதுதான்
டாக்கர் படத்தை உருவாக்க நமக்கு தேவயான சார்பு படங்களை முதலில் பதிவிறக்கி அதனை தயார்படுத்திக்கொள்வோம்.
என்னுடய டாக்கர் படம் மிகவும் சிறியதாக வேண்டும் என நினைப்பதால் நான் python3-alpine பயன்படுத்துகிறேன்.
மேற்கண்ட கட்டளைவரிகளை பயன்படுத்தி நாம் நமது நிறுவலை சரிபார்க்கலாம்.
டாக்கர் கோப்பை எழுதுதல் மற்றும் டாக்கர் படத்தை உருவாக்குதல்
# we are choosing the base image as python alpine
FROM activestate/python3-alpine:latest
# setting work directory
WORKDIR ./foss-event-aggregator
# Copying the workdirectory files to the container
COPY ./foss-event-aggregator ./foss-event-aggregator
# Installing required dev-dependencies
# RUN ["pip3","install","-r","./foss-event-aggregator/dev-requirements.txt"]
# Running PIP commands to update the dependencies for the
RUN ["apk","add","libxml2-dev","libxslt-dev","python-dev"]
RUN ["pip3","install","-r","./foss-event-aggregator/requirements.txt"]
CMD ["python","eventgator.py"]
டாக்கர் கோப்பு எழுதும் போது தேவையான சார்புகள் அனைத்தும் சரியாக நிறுவப்படுகிறதா என்பதை சரிபார்க்க பிழைச்செய்தி வரும்போது அதனை சரிசெய்ய டாக்கர் கோப்பை தேவைப்படி மாற்றுக.
வெற்றிகரமாக foss-event-aggregator எனும் டாக்கர் படம் உருவாக்கப்பட்டது.
உருவாக்கப்பட்ட படத்தை பரிசோதித்தாகிவிட்டது இப்பொழுது டாக்கர் ஹப்புக்கு பதிவேற்றலாம்.
டாக்கர் ஹப்புக்கு பதிவேற்றுதல்
படத்தை பரிசோதித்த பிறகு கோப்புறை பெயரில் டாக் செய்யவேண்டும்
docker image tag foss-event-aggregator:v1 itzmrevil/foss-events-aggregator:v1
டாக் செய்யபட்ட பிறகு டாக்கரில் CLIல் உள்நுழைவு செய்து டாக்கரில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே டாக்கர் ஏற்றுக்கொள்ளும்.
ஒரு கணிணியில் ஒரு வலைப்பயன்பாடினை இயங்குவதற்கு 4 பயன்பாடுகள் பயன்படுத்த வேண்டுமெனில் அந்த பயன்பாடு இயக்கத்திற்காக சார்ந்திருக்கும் நுண்செயலி(CPU), நினைவகம்(RAM), சேமிப்பக (Storage) போன்ற வன்பொருள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதே தேவைகளை சில சமயங்களில் பயனர்களின் (Users) எண்ணிக்கைக்கு ஏற்றவாறும் பயன்பாட்டின் அளவுகளுக்கு (Usage) ஏற்றவாறு நாம் அதிகப்படுத்த (Scaling) வேண்டியுமுள்ளது.
ஓரே கணிணியில் அதிகளவு பயனர்களின் அணுகல்களை அனுமதித்தால் அதிகபயன்பாட்டின் காரணமாக வலைதளங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.இதனை தவிர்க்க தனித்தனி இயந்திரங்களை பயன்படுத்தும் போது தேவைக்கு அதிகமாக வன்பொருள் மீதமிருக்கும் அது முழுவதுமாக பயன்படுத்தப் படாமலும் இருக்கும் (proper utilisation).
எடுத்துக்காட்டாக கீழ்வரும் 4 பயன்பாடுகளை
அப்பாச்சி வலை சேவையகம்
கிராப் கிகுவெல் எந்திரம்
போஸ்டுகிறீஸ் தரவுதள அமைப்பு
எக்ஸ்பிரஸ் வலைச் சேவையகம்
ஒரு கணிணியில் இயக்குவற்கு 4 GB (RAM), 2 Core (CPU) மற்றும் 250 GB (Storage) தேவைப்படும் என வைத்துக்கொள்வோம்.
நம்மிடம் 16 GB (RAM), 16 Core (CPU) மற்றும் 1000 GB கொண்ட கணினி உள்ளது அதில் இரண்டு நிறுவல்களை அமைத்து சோதணை செய்து பார்க்க மெய்நிகர் இயந்திரங்கள் கருத்துரு வழிவகை செய்கிறது.
ஆகவே ஒரு கணினியில் வன்பொருள் அமைப்புகளை தேவைகளைப் பொறுத்து ஒரு கணினியை பல கணினிகளாக மாற்றி சோதனை செய்து பயன்படுத்தும்போது அந்த கணிணிகளை மெய்நிகர் இயந்திரங்கள் எனப் பொருள் கொள்ளலாம்.
Talk 0: Topic : MiniDLNA media server. Name : Syed Jafer
எமது பைத்தான் வகுப்பின் பயிற்றுனர் செய்யது ஜாபர் தன்னுடைய கணினியில் miniDLNA பல்லூடக வழங்கி (media server) நிறுவுதல் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரை வழங்கினார்.
அந்த பயன்பாட்டினை என்னுடைய உபுண்டு இயங்குதளத்தில் நிறுவியது குறித்து இப்பதிவில் காணலாம்.
எந்த பயன்பாட்டையும் உபுண்டு இயங்குதளத்தில் நிறுவல் செய்யவேண்டி இயங்குதளத்தினை நிகழ்நிலைப்படுத்தினேன் (updating)
sudo apt update
இயங்குதளத்தினை நிகழ்நிலைப்படுத்திய பிறகு
sudo apt install minidlna
நிறுவல் நல்லபடியாக முடிந்தது.
இப்பொழுது பல்லுடக வழங்கியைநமக்கு தேவைப்படும் படி கட்டமைத்துகொள்ளும் படிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
என்னுடைய கணிணியில் ஒரு பயனறே உள்ளபடியால் அவருக்கு மட்டும் நிறுவலைக் கட்டமைப்பு செய்வோம். பின்னர் பல்லூடக கோப்புகளின் இருப்பிடங்களை கட்டமைப்பு செய்வோம்.
எப்பொழுதும் கணினியில் கட்டமைவை மாற்றும் போது அதனை ஒரு காப்புபிரதி (backup) எடுத்து பயன்படுத்துதல் நன்று.
db_dir=/var/cache/minidlna
log_dir=/var/log/minidlna (create folder manually if not created automatically)
friendly_name=UbuntuMediaServer
மேற்கண்ட வரிகளில்
media_dir என்பது பல்லூடக கோப்புகளை வழங்கியில் காண்பிப்பதற்கான கட்டமைவு ஆகும்.
db_dir என்பது கோப்புகளின் பிற விவரங்களை சேமித்துவைக்க வழங்கி பயன்படுத்தும் கோப்புறை
log_dir என்பது வழங்கி பிழைச்செய்திமற்றும் பிற முக்கிய பயன்பாட்டின் நிகழ்வுகளை பதியும் கோப்புறை
friendly_name என்பது நமது வழங்கிக்கு நாம் வழங்கும் பெயர். பிற dlna நெறிமுறை மூலம் இயங்கும் பயன்பாடுகள் நமது வழங்கியை பயன்படுத்தும் போது இந்த பெயரின் கீழ் கோப்புகளை வழங்கும்.
எனது பரிசோதனைகள்
MX Player – Android லிருந்து பல்லூடக வழங்கியை அணுகுதல்.
Talk 0: Topic : MiniDLNA media server. Name : Syed Jafer
எமது பைத்தான் வகுப்பின் பயிற்றுனர் செய்யது ஜாபர் தன்னுடைய கணினியில் miniDLNA பல்லூடக வழங்கி (media server) நிறுவுதல் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் உரை வழங்கினார்.
அந்த பயன்பாட்டினை என்னுடைய உபுண்டு இயங்குதளத்தில் நிறுவியது குறித்து இப்பதிவில் காணலாம்.
எந்த பயன்பாட்டையும் உபுண்டு இயங்குதளத்தில் நிறுவல் செய்யவேண்டி இயங்குதளத்தினை நிகழ்நிலைப்படுத்தினேன் (updating)
sudo apt update
இயங்குதளத்தினை நிகழ்நிலைப்படுத்திய பிறகு
sudo apt install minidlna
நிறுவல் நல்லபடியாக முடிந்தது.
இப்பொழுது பல்லுடக வழங்கியைநமக்கு தேவைப்படும் படி கட்டமைத்துகொள்ளும் படிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
என்னுடைய கணிணியில் ஒரு பயனறே உள்ளபடியால் அவருக்கு மட்டும் நிறுவலைக் கட்டமைப்பு செய்வோம். பின்னர் பல்லூடக கோப்புகளின் இருப்பிடங்களை கட்டமைப்பு செய்வோம்.
எப்பொழுதும் கணினியில் கட்டமைவை மாற்றும் போது அதனை ஒரு காப்புபிரதி (backup) எடுத்து பயன்படுத்துதல் நன்று.
db_dir=/var/cache/minidlna
log_dir=/var/log/minidlna (create folder manually if not created automatically)
friendly_name=UbuntuMediaServer
மேற்கண்ட வரிகளில்
media_dir என்பது பல்லூடக கோப்புகளை வழங்கியில் காண்பிப்பதற்கான கட்டமைவு ஆகும்.
db_dir என்பது கோப்புகளின் பிற விவரங்களை சேமித்துவைக்க வழங்கி பயன்படுத்தும் கோப்புறை
log_dir என்பது வழங்கி பிழைச்செய்திமற்றும் பிற முக்கிய பயன்பாட்டின் நிகழ்வுகளை பதியும் கோப்புறை
friendly_name என்பது நமது வழங்கிக்கு நாம் வழங்கும் பெயர். பிற dlna நெறிமுறை மூலம் இயங்கும் பயன்பாடுகள் நமது வழங்கியை பயன்படுத்தும் போது இந்த பெயரின் கீழ் கோப்புகளை வழங்கும்.
எனது பரிசோதனைகள்
MX Player – Android லிருந்து பல்லூடக வழங்கியை அணுகுதல்.