Normal view

There are new articles available, click to refresh the page.
Before yesterdayShyamala

டூப்பிள்ஸ் (Tuples):

By: Augshya
9 August 2024 at 12:29

பைத்தானின் தரவு வகைகளில் ஒன்று டூப்பிள்ஸ் . இது தரவை சேமிக்க உதவுகிறது.
இதனுடைய சின்டெக்ஸ் (Syntax) :
• டூப்பிள்கள் வட்ட அடைப்புக்குறிகளுடன் எழுதப்பட்டுள்ளன.

tuple_name =(“One”,”Two”,”Three”)

அம்சங்கள்:
• டூப்பிள்ஸ் வரிசை முறையை சார்ந்தது (Ordered) . நாம் டூப்பிள்ஸ் எந்த வரிசையில் உள்ளீடு தருகிறோமோ அதே வரிசையில் தான் வெளியீடு கிடைக்கும் .
• டுப்ளிளில் உள்ள ஐட்டம் மாற தன்மை கொண்டது (Unhangeable/ Immutable in Nature). அதாவது நம்மால் வேறு ஒரு தரவை நேரடியாக இணைக்கோவோ மாற்றவோ நீக்கவோ முடியாது
• நகல் தரவை இது அனுமதிக்கும் (Duplicate Values are Allowed)
• பன்முகத்தன்மை கொண்ட கொண்டது. (heterogeneous) . அதாவது, எல்லா தரவு வகைகளையும் இது அனுமதிக்கும்

Len செயற் கூறு:(len()):
டுப்ளிளில் எத்தனை item உள்ளன என்பதை அறிய உதவும் செயற் கூறு.
உள்ளீடு (Input):

tuple_name = (“One”, “Two”, 3)
print(len(tuple_name))
வெளியீடு (Output) : 3

type() செயற் கூறு:
கொடுக்கப்பட்ட தரவு எந்த வகையை சார்ந்தது என்பதை அறிய உதவும் செயற் கூறு
உள்ளீடு (Input):
tuple_name = (“One”, “Two”, 3)
print(type(tuple_name))

வெளியீடு (Output):

Notes: ஒரே ஒரு மதிப்பை கொண்டு ஒரு டூப்பிள் ஐ உருவாக்க, மதிப்பு பிறகு காற்புள்ளியைச் சேர்க்க வேண்டும், இல்லையெனில் பைத்தான் அதை டூப்பிள்ஸ் ஆக அங்கீகரிக்காது. இல்லையென்றால் சாதாரண சரம் ஆக கருதப்படும்.

dict() Constructor:
ஒரு தரவு வகையை டூப்பிள் தரவு வகையாக மாற்ற பயன்படும் செயற் கூறு
உள்ளீடு (Input):
tuple_name = tuple((“name”,”age”,”cherry”))
வெளியீடு (Output)
(“name”,”age”,”cherry”)

சதுர அடைப்புக்குறிக்குள், குறியீட்டு எண்ணைக் குறிப்பிடுவதன் மூலம் டூப்பிள் உள்ள vales பெறலாம்
உள்ளீடு (Input):

fruits = ("apple", "banana", "orange")
print(fruits[1])

வெளியீடு (Output)

banana

இதேபோல் எதிர்மறையாகவும் செய்யலாம்

உள்ளீடு (Input):

fruits = ("apple", "banana", "orange")
print(fruits[-1])

வெளியீடு (Output)

Orange

  • ட்யூப்லை புதுப்பிக்க இயலாது .ஒரு முறை உருவாக்கப்பட்டால் அதனை புதுப்பிக்க இயலாது .மாறாக , அதை லிஸ்ட் ஆக மாற்றி லிஸ்ட்டை புதுப்பித்து மறுபடியும் லிஸ்ட்டை ட்யூப்லாக மாற்றலாம். உள்ளீடு (Input): x = ("name", "address", "age") y = list(x) y[2] = "state" x = tuple(y) print(x) வெளியீடு (Output) ("name", "address", "state")

இதே முறையை பயன்படுத்தி ஒரு தரவை இணைக்கவும் மாற்றவும் நீக்கவும் இயலும்
நாம் ஒரு டூபிளை உருவாக்கும்போது, அதற்கு மதிப்புகளை பொதுவாக ஒதுக்குவோம். இது "பேக்கிங்" என்று அழைக்கப்படுகிறது. பைத்தானில், மதிப்புகளை மீண்டும் பிரித்தெடுத்தல் "அன்பேக்கிங்" என்று அழைக்கப்படுகிறது.
Packing:
உள்ளீடு (Input):

fruits = ("apple", "banana", "orange")
print(fruits)
வெளியீடு (Output)
(‘apple’, ‘banana’, ‘orange’)

Unpacking:
உள்ளீடு (Input):

fruits = ("apple", "banana", "orange")

(green, yellow, red) = fruits

print(red)
print(yellow)
print(orange)
வெளியீடு (Output)

apple
banana
orange
இரண்டு டுபிளை இணைத்தல்:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டூப்பிள்களில் இணைக்க, + ஆபரேட்டரைப் பயன்படுத்தலாம்:

உள்ளீடு (Input):
tup1 = (“python”,”c”, “Java”)
tup2 = (101,300,56)
tup3 =tup1+tup2
Print(tup3)

வெளியீடு (Output):
(‘python’,’c’,’Java’,101,300,56)

Dictionary

By: Augshya
6 August 2024 at 15:47

பைத்தானின் தரவு வகைகளில் ஒன்று டிக்சனரி. இது தரவை சேமிக்க உதவுகிறது.
இதனுடைய சின்டெக்ஸ் (Syntax) :
{Key:Values}
{} - சுருள் அடைப்புக்குறி
Key = தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு முறை தான் பயன்படுத்த முடியும் .
Values = எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.
Key மற்றும் Values இரண்டும் சேர்ந்தது தான் ஐட்டம் (Item) என்று சொல்லப்படுகிறது.
உதாரணம்: 1
பள்ளியில் பயிலும் போது நமக்கு வரிசை எண் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த வரிசை எண் தான் Key எனப்படுகிறது . ஒரு வரிசை எண் ஒரு முறை தான் வரும் மறுபடியும் அந்த வரிசை எண் மீண்டும் வர இயலாது .
நம்முடன் பயிலும் மாணவர்களின் பெயர்கள் , ஒரே பெயரில் இரண்டு மூன்று பேர் இருப்பர் . உதாரணத்திற்கு முருகன் என்ற பெயரில் இரு நபர் இருக்கின்றனர் .இதுதான் இது வேல்யூ (Value) எனப்படுகிறது. ஒரே பெயரில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
உதாரணம்: 2

தொலைபேசிகளில் உள்ள பெயர்களின் பட்டியல் : ஒவ்வொரு பெயரும் ஒரு தொலைபேசி எண்ணுடன் தொடர்புடையது.
9874563210 : Murugan

அம்சங்கள்:
• டிக்ஷனரி வரிசை முறையை சார்ந்தது (Ordered) . நாம் டிக்ஷனரியில் எந்த வரிசையில் உள்ளீடு தருகிறோமோ அதே வரிசையில் தான் வெளியீடு கிடைக்கும் (Version 3.7) . முந்தைய பதிப்பில் டிக்ஷனரி (Version 3.6)வரிசை முறையை பின்பற்றவில்லை(Unordered). உள்ளீடு கொடுக்கும் வரிசை வேறு, வெளியிடில் வரும் வரிசை வேராக இருக்கும்.
• டிக்ஷனரியில் உள்ள ஐட்டம் மாறும் தன்மை கொண்டது (Changeable). அதாவது நம்மால் வேறு ஒரு தரவை இணைக்கவும் முடியும், மாற்றவும் முடியும், அதை நீக்கவும் முடியும்.
• நகல் தரவை இது அனுமதிக்காது(Duplicate Values Not Allowed)
• பன்முகத்தன்மை கொண்ட கொண்டது. (heterogeneous) . அதாவது, எல்லா தரவு வகைகளையும் இது அனுமதிக்கும்.

Len செயற் கூறு:(len()):
டிக்ஷனரி யில் எத்தனை item உள்ளன என்பதை அறிய உதவும் செயற் கூறு.
உள்ளீடு (Input):

dict = {"101": "Murugan", "102": "Krishna", "103": “Shiva”, "104": “Sakthi”}
print(len(dict))
வெளியீடு (Output) : 4
type() செயற் கூறு:
கொடுக்கப்பட்ட தரவு எந்த வகையை சார்ந்தது என்பதை அறிய உதவும் செயற் கூறு
உள்ளீடு (Input):
dict = {"101": "Murugan", "102": "Krishna", "103": “Shiva”, "104": “Sakthi”}
print(type(dict))
வெளியீடு (Output):

dict() Constructor:
ஒரு தரவு வகையை டிக்சனரி தரவு வகையாக மாற்ற பயன்படும் செயற் கூறு
உள்ளீடு (Input):
Dict = dict(name = "John", age = 36, country = "Norway")
வெளியீடு (Output)
{'name': 'John', 'age': 36, 'country': 'Norway'}

இதேபோல் ஒரு தரவு இணைப்பதற்கும் நீக்குவதற்கும் நிறைய செயற் கூறுகள் உள்ளன.

உள்தள்ளல்,குறிப்பெயர்கள்,சிறப்புச் சொற்கள்

By: Augshya
1 August 2024 at 15:42

உள்தள்ளல் (Indentation):
பைத்தானில் உள் தள்ளல் என்பது இடைவெளி(Spaces) மற்றும் தத்தல்கள்(Tabs) ஆகியவற்றை வரையறுக்க பயன்படுகிறது .பைத்தானில் வெற்று இடைவெளிகளுக்கு என ஒரு எண்ணிக்கை எதுவும் இல்லை . ஆனால் அனைத்து கூற்றுகளும் ஒரே அளவான உள்தள்ளல் இருக்க வேண்டும்.

குறிப்பெயர்கள் (Variables or Identifiers):
பைத்தானில் செயற்குழு அல்லது பொருட்களை அடையாளம் காண குறிப்பெயர்கள் பயன்படுகிறது.
குறிப்பெயர்கள் எழுத்துக்களில் தொடங்கும் அல்லது அடுகிரு (_ ) கொண்டு தொடங்கும்.( alpha-numeric characters and underscores)
குறிப்பு பெயர்கள் எண்களை வைத்து தொடங்காது.
பைத்தான் குறிப்பெயர்கள் case sensitive கொண்டது. அதாவது ஆங்கில பெரிய எழுத்துக்கள் மற்றும் சிறிய எழுத்துக்களை வெவ்வேறாக கருதப்படும்.
பைத்தானின் சிறப்பு சொற்கள் குறிப்பெயர்களாக பயன்படுத்தக் கூடாது .

உதாரணத்திற்கு,
சரியானவை
myvar= "Python"
my_var= "Python"
_my_var= "Python"
myVar= "Python"
MYVAR== "Python"
myvar2 = "Python"
தவறானவை
2myvar= "Python"
my-var= "Python"
my var = "Python"

குறிப்பெயர்கள் ஒரு வார்த்தைக்கு மேல் இருந்தால் அதை படிப்பதற்கு கடினம் என கருதி சில நுட்பங்களை வரையறுத்துள்ளனர் .

கேமல் கேஸ் (Camel Case):
முதல் வார்த்தை தவிர ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பெரிய எழுத்தில் தொடங்குகிறது
myVariableName = "Python"

பாஸ்கல் கேஸ் (Pascal Case):
ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பெரிய எழுத்தில் தொடங்குகிறது
MyVariableName = "Python"

ஸ்நேக் கேஸ் (Snake Case):
ஒவ்வொரு வார்த்தையும் அடிக்கோடிட்ட எழுத்தால் பிரிக்கப்படுகிறது
my_variable_name = "Python"

சிறப்புச் சொற்கள் (Keywords):
பைத்தானில் சிறப்பு சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த சொற்கள் வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது. சில சிறப்புச் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Image description

குறிப்புரைகள்(Comments in Python):

By: Augshya
1 August 2024 at 14:45

குறிப்புரைகள்(Comments):
நாம் நிரல் மொழியை எழுதும்பொழுது வருங்காலத்தில் அதை புரிந்து கொள்ள சில விளக்கங்களை எழுத வேண்டும். இது ஒரு வரி அல்லது பல வரி விளக்கங்களாக இருக்கலாம் அப்படி எழுதும் பொழுது அதை வரி மொழியாக மாற்றாமல் இருக்க # என்ற குறி ஒரு வரியை விளக்குவதற்காகவும் , “””மூன்று மேற்கோள் குறிகள் பல வரி குறிப்புரைக்கு பயன்படுத்த வேண்டும் .

உதாரணத்திற்கு,

# It is a single line comment

“””it is multiline comment
We can use either single or
Double triple quotes”””

'''it is multiline comment
We can use either single or
Double dripple quotes'''

விளைவு செயற் கூறு (Print() function):

By: Augshya
29 July 2024 at 15:42

***விளைவு செயற் கூறு (Print() function):*
நிரலின் தீர்வுகளை திரையில் காட்ட பயன்படுகிறது. இந்த செயற் கூறுவில் நமக்கு வேண்டிய தீர்வுகளை கொண்டு வரலாம். அதற்காக , பைத்தானில் உள்ளமைக்கப்பட்ட முறைகள் (built-in methods ) உள்ளது . உள்ளீடு செய்தி ஒரு சரமாக இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் பொருளாக இருக்கலாம், அந்த பொருள் திரையில் எழுதப்படுவதற்கு முன்பு சரமாக மாற்றப்படும்.சில உதாரணங்களை கீழே விரிவாக காணலாம்.

உள்ளீடு :

1.print("Hello World")

2.cap = "hello, and welcome to my world."

x = cap.capitalize()

print (x)

3.upper = "Hello my friends"

print(upper.upper())

வெளியீடு :
1.Hello World

2.Hello, and welcome to my world. (இந்த வாக்கியத்தில் முதல் எழுத்து மட்டும் மாற்றம் அடையும்)

  1. HELLO MY FRIENDS (மேல்() முறை அனைத்து எழுத்துகளும் பெரிய எழுத்தில் இருக்கும் சரத்தை வழங்குகிறது.

சின்னங்கள் மற்றும் எண்கள் புறக்கணிக்கப்படுகின்றன)

நாம் எஸ்ஸ்ல்லில்( Excel )பயன்படுத்துவது போன்ற செயற்கூறு பைத்தானிலும் உள்ளது . எஸ்ஸ்ல்லை பயன்படுத்தியவர்களுக்கு இது கொஞ்சம் சுலபம்.

title() - ஒவ்வொரு வார்த்தையின் பெரிய எழுத்திலும் முதல் எழுத்தை உருவாக்கவும்
zfill() - தொடக்கத்தில் 0 மதிப்புகளின் குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் சரத்தை நிரப்புகிறது

மேலே குறிப்பிட்டதை போலவே நிறைய விளைவு செயற்கூறு உள்ளன . அவற்றை நாம் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திகொள்ளலலாம் .

அறிமுகம்

By: Augshya
28 July 2024 at 09:13

எனக்கு கணினி துறை அனுபவம் கிடையாது. சில மாதங்களாகவே அதில் ஆர்வம் தோன்றியது. இணைய தளங்கள் வழியாக HTML , CSS கற்றுக் கொண்டேன். இது போதாது என்று நினைத்து இணையத்தில் தேடினேன் ,எந்த மொழி கற்பதற்கு மிகவும் எளிது என்று,
அப்போது எனக்கு தென்பட்டது கணியம் அறக்கட்டளை. அவ்விணையத்தில் ஏராளமான நிரல் மொழி புத்தகங்கள் தமிழில் இருந்தன. அதன்பால் நான் ஈர்க்கப்பட்டு அறக்கட்டளையின் நிறுவனர் திரு சீனிவாசன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எனக்கு கூறியது, முதலில் பைத்தானை படியுங்கள் என்று கூறினார். அது மிகவும் எளிது மற்ற நிரல் மொழியை காட்டிலும் பைத்தான் மிகவும் எளிது புரிந்து கொள்வதற்கும் படிப்பதற்கும் என்று கூறினார். அதற்க்கு அவரிடம் பைத்தானை பற்றி இணையவழியில் எடுக்க முடியுமா என்று வினவியபோது அவர் சரி என்று ஒப்பு கொண்டார்.
திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழ் லீனஸ் குழுவில் பதிவிட்டார் அந்த பதிவை பார்த்த திரு சயீத் சபார் அவர் எடுப்பதாக கூறினார். இந்த முயற்சி பெரும்பான்மையான மக்களுக்கு பயன்படவேண்டும் என்று நினைத்து அறக்கட்டளையின் நிறுவனர் அவர்கள் பல குழுவில் இதனை பதிவிட்டார்.
அதன் விளைவாக ஜூலை, 8, 2024 அன்று முதல் வகுப்பு தொடங்கியது அதில் சுமார் 550 பயனாளர்கள் இணைந்து தங்களின் கேள்விகளை கேட்டனர் . அவர்களுக்கு புரியும் விதமாக திரு சயீத் சபார் மற்றும் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் பயனாளர்களின் சந்தேங்கங்களை போக்கினார். அவ்விருவருக்கும் வெறும் நன்றி சொன்னால் மட்டும் போதாது அவர்கள் கற்பித்ததை தினமும் பயிற்சி செய்து , அதை வலைத்தளத்தில் எழுதி அனுப்பவேண்டும் அதோடு நின்றுவிடாமல் அதை பிறருக்கு பயன்படும் வகையில் கற்பிக்க வேண்டும்.

பைத்தானை பார்ப்பதற்கு முன், முதலில் நிரல் மொழி (Programming Language )என்றால் என்ன என்பதை பார்ப்போம். நிரல்(Program) என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து வந்தது. அதாவது ப்ரோ (Pro)என்றால் முன்னாடி (Before)என்று பொருள் கிராஸ்மின் (Graphein) என்றால் எழுதுதல் என்று பொருள். நிழல் (Prohram) என்றால் முன்னாடியே எழுதி வைக்கப்பட்டது(Writing Something in Advance) என்பது பொருள்.
உதாரணம் ஒரு நபரிடம் ஒரு புதிய உணவு எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற செயல்முறை மற்றும் என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை விரிவாக ஒரு தாளில் எழுதிக் கொடுத்தால் அதை படித்து அவ்வாறே செய்து விடுவார் .
இதே அடிப்படையில் கணினிக்கும் ஒரு நிரல் மொழியை எழுதலாம், கொஞ்சம் கூடுதல் விளக்கங்களைஅத்தோடு சேர்க்க வேண்டும் .எப்படி என்றால் ஒரு நபருக்கு நாம் இதை செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுத்தால் போதும் ,அவருக்கு சிந்திக்கும் திறன் ,என்ன பொருள் எங்கு உள்ளது என்பது தெரியும் .ஆனால் நிழல் மொழி என்று வரும்போது நாம் என்ன செய்ய சொல்கிறோமோ அது தான் அதை செய்யும். அதனால் தெளிவாக விளக்கமாக அதற்கு புரிய வைக்க வேண்டும் .
பருப்பு எங்கு உள்ளது என்பதை மூன்றாவது அலமாரியில் ,இடது புறத்திலிருந்து நான்காம் இடத்தில் உள்ளது. அதை அடைய அடுப்பில் இருந்து இரண்டடி நேராக எடுத்து வைத்து வலது பக்கம் இரண்டடி திரும்பி நேராக இரண்டடி சென்று கதவை திறக்க வேண்டும் என்று விரிவாக சொல்ல வேண்டும் .தெளிவாக எழுத வேண்டும் .
மொழி என்றால் மனிதர்கள் தங்களின் கருத்துக்களை தெரிய பயன்படுத்துவது ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள மொழி தேவைப்படுகிறது உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. அதில் முக்கிய மொழிகளாக கருதப்படுவது ஆங்கிலம். ஹிந்தி, தமிழ் முதலிய மொழிகள் ஆகும் . மொழிகளைப் போலவே கணினிக்கும் பல மொழிகள் உள்ளன .அதில் ஒன்றுதான் நாம் கற்கவிருக்கும் பைத்தான் மொழி ஆகும் .

அறிமுகம்

பைத்தான் என்பது பொது பயன்பாட்டு நிரல் ஆக்க மொழி ஆகும் இதை நெதர்லாந்தின் கணிதவியல் மற்றும் கணித அறிவியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் என்று அழைக்கப்படும் (CWI – Centrum Wiskunde & Informatica) சார்ந்த கைடோ வான் ரோஸும் என்பவரால் உருவாக்கப்பட்டது. இம்மொழி 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பைத்தான் அதன் பெயரை எழுதுகளில் 70களில் பிரபலமான பிபிசி நகைச்சுவை தொடரான “மோண்டி பைத்தான் பிளையிங் சர்க்கஸ்” இருந்து பெயர் பெற்றது.பைத்தான் கட்டமைக்கப்பட்ட நிரலாக்க மொழி (Procedural) மற்றும் பொருள் நோக்கு நிரலாக்க மொழியை (Object Oriented Programme)ஆதரிக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்:

மொழி பெயர்ப்பாளர் என்றால் வேறொரு நாட்டவர் ,நம் நாட்டில் வந்து உரையாடும்போது நமக்கு அந்த மொழி புரியவில்லை என்றால் உடனே மொழிபெயர்ப்பாளர் அவற்றை மொழி பெயர்த்து நமக்கு விளங்க வைப்பார்.
அதுபோலவே கணினிக்கும் நிரல் மொழியை புரிய வைப்பதற்கு இரண்டு மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர் .அவர்கள்தான் interpreter மற்றும் Compiler.
interpreter என்றால் வரிவரியாக மொழி மாற்றம் செய்பவர் .
Compiler என்றால் ஒரு பத்தியோ அல்லது உரையாற்றி முடிந்த பின்னால் அதனை மொழி மாற்றம் செய்பவர் என்ற பொருள்.
பைத்தான் நிரல்மொழி interpreter வகையை சார்ந்தது பைத்தான் நிரல் மொழியை 2 முறையில் எழுதலாம் ஒன்று ஊடாடும் முறை(Interactive) இன்னொன்று ஸ்கிரிப்ட் முறை (Script) முறைகளில் எழுதலாம்.

பைத்தானை ஏன் படிக்க வேண்டும் ?:
• பைத்தானை படிப்பதற்கு காரணம் மற்ற நிரலாக்க மொழியை காட்டிலும் பைத்தான் புரிந்து கொள்ளவும் படிக்கவும் மிகவும் எளிமையாக உள்ளது.
• முக்கிய காரணம் மற்ற மொழிகளை விட இதில் உள்ள செயற்குழு மிகவும் எளிதாக உள்ளது .
• எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய மொழி .
• இதனை அனைத்து osகளிலும் இயக்கலாம் .
• உயர் நிலை நிரலாக்க மொழி (High Level Programming Language)
• மற்ற மொழிகளோடு இணைந்து பயணிக்கும் தன்மை கொண்டது. இதனை பைத்தான் ஃபிளேவர்ஸ் (Python Flavors)என்று அழைக்கப்படுகிறது .உதாரணம்: Cpyton,Jpython, Rupy Python, Pypy, Annoconda Python etc.,
• நிழல் மொழி பின்புலம் இல்லாதவர்கள் பைத்தானை முதலில் படித்தால் அவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் .இதனுடைய சின்டெக்ஸ் மிகவும் எளிமையாக உள்ளது.
• இதில் லைப்ரரி (Libarary) மற்றும் பிரேம் வொர்க் (Frame Work) அதிகமாக உள்ளது.
லைப்ரரி(Library) என்றால் நமக்கு வேண்டிய புத்தகத்தை நாமே சென்று அதனை தேடி எடுத்துக் கொள்வது. ஃப்ரேம் ஒர்க் என்றால் என்ன தேவையோ அது எல்லாமே ஒரே இடத்தில் கிடைப்பது.
உதாரணத்திற்கு, நாம் தேநீர் தயாரிக்கும் போது அதில் சுவையையும் மனத்தையும் கூட்டுவதற்காக ஏலக்காய், பட்டை முதலிய பொருட்களை சேர்க்கிறோம்.. தினமும் இவ்வாறு செய்வதால் கொஞ்சம் காலம் ஆகிறது அதை உருவாக்குவதற்கு. அதை நாம் கொஞ்சம் எடுத்து உபயோகிக்கலாம் இதுதான் Frame Work.eg (django,etc.,)

இப்பொழுது பைத்தானை படித்தால் ஏற்படும் பயன்களை பார்ப்போம். என்னென்ன துறைக்கு பைத்தானை பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

  1. Web Application: a. Pythonwikiengine b. Python-Pocoo c. Python Blogsoftware
  2. AI(Artificial Intelligence)
  3. Machine Learning a. Scienticfic Computation – Numpy b. Advanced Computing – Scipy c. Machine Learning - pybrain
  4. Desktop GUI Application
  5. Software Development a. Libraries and Function
  6. Scienticfic and Numeric Computing a. Scipy (Engineering, Mathematics and Science) b. Pandas
  7. Business Application a. Erp, e-Commerce
  8. Console Based Application a. Command Prompt b. SQL Python
  9. Audio/Video Based Application a. Timplay b. Cplay
  10. 3CAD Application a. Fandango
  11. Application for Image a. VPython b. Gogh c. Imgseek
  12. Games and 3D Graphics a. Snake Game b. Pygame c. Pykyre d. Tic Tac Toe இப்பொழுது பைத்தானை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பார்ப்போம்

Image description

Image description

Image description

Image description

Image description

Image description

Image description

Image description

❌
❌