HiTechLab,in,Tamilnadu,Schools
தமிழ்நாட்டு அரசுஉயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 5 ஆண்டிற்கு முன் HiTech lab ஒன்று தொடங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.அதில் ஒரு Server 10/20 thin client இருக்கும்.அதை எப்படி பயன்படுத்துவது என்று இதுவரைக்கும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கோ அல்லது அலுவலக பணியாளர்களுக்கோ தெரியாது.ஏனெனில் windows இல் பழகி விட்டு Linux Boss OS ஐ எப்படி செயல்படுவது என்றே தெரியாமல் இருக்கிறது.உதாரணத்திற்கு chrome browser ஐ அதில் எப்படி install செய்வதென்றே தெரியவில்லை.இந்த நிலையில் என்னுடைய Facebook timeline இல் Python language கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு என பதிவுகள் தென்பட்டன.நானும் குறிப்பிட்ட WhatsApp குழுவில் இணைந்தபோது Linux என்பது பல்வேறு வகைகளில் இலவச மற்றும் பிரத்யேக பயன்பாட்டுக்கு ஏற்ற ஒரு OS என தெரியவருகிறது.இனிமேல் தான் அந்த WhatsApp குழுவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு தேங்கி கிடக்கும் Hi tech lab பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.நன்றி