Normal view

There are new articles available, click to refresh the page.
Before yesterdayFathima Shaila

Dictionary- Day 10

6 August 2024 at 08:14

தரவுகளை அதன் பெறுமதிகளோடு வகைப்படுத்திக்கொள்ள பைத்தானில் dictionaryஐ பயன்படுத்தலாம்.

attendance ={"Hiba": 20, "Ayana": 23, "Maisha": 33,
}

Dictionary இற்கு புதிய தரவுகளை இணைத்தல்
attendance ["Arham"]= 24

தரவின் பெறுமதியை இற்றைப்படுத்தல்
attendance["Hiba"] += 10

தரவொன்றை நீக்குதல்
del attendance["Maisha"]

தரவுகள் உண்டா இல்லையா என்று சோதித்தல்
is_hiba_in_attendance_list = "Hiba" in attendance
print(is_hiba_in_attendance_list)

True

தரவுகளை ஒழுங்குபடுத்தல்
for name, days in attendance.items():
print(f"Name :{name}, Days : {days}")

Name :Hiba, Days : 30
Name :Ayana, Days : 23
Name :Arham, Days : 24

Lists & its operations- Day 9,10

2 August 2024 at 06:39

பைத்தானில் பட்டியல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

fruits = ["Mango", "Apple", "Papaw", "Grapes"]
print(fruits)

['Mango', 'Apple', 'Papaya', 'Grapes']

Listஇல் புதிதாக ஒன்றை சேர்ப்பதற்கு

print(fruits.append("Banana"))

['Mango', 'Apple', 'Papaya', 'Grapes', 'Banana']

புதிதாக சேர்த்த பொருள் இறுதியில் இணையும்

list இல் ஒன்றை அகற்றுவதற்கு
print(fruits.remove("Papaya"))

['Mango', 'Apple', 'Grapes', 'Banana']

இறுதியில் உள்ள பொருளை அகற்றுவதற்கு
print(fruits.pop())

Grapes

அகற்றிய பின் list இல் உள்ளவை
print(fruits)

[Mango', 'Apple', 'Papaw']

list இல் உள்ள stringஇன் இடத்தை அறியவதற்கு
Indexing ஐ பயன்படுத்தி அறியலாம்.

print(fruits.index("Papaw"))

2

list இல் slicingஐ பயன்படுத்தல்

print(fruits[0:3])

['Mango', 'Apple', 'Papaw']

alphabetic வரிசையில் ஒழுங்குப்படுத்தல்

fruits.sort()

list ஐ மீள அமைத்தல்
fruits.reverse.()

Slicing & iterables - Day 8

28 July 2024 at 10:12

Slicing with Step

string[start:stop:step] இந்த syntax ஐ பயன்படுத்தி slice இல் எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளியை குறிக்கலாம்.

number = "123456789"
print(number[0:10:2])

13579

உயிர்எழுத்துக்கள் = "அஆஇஈஉஊஎஏஐஒஓஔ"
print(உயிர்எழுத்துக்கள்[0:13:2])

அஇஉஎஐஓ

print(உயிர்எழுத்துக்கள்[2:10:2])

இஉஎஐ

print(உயிர்எழுத்துக்கள்[::2])

அஇஉஎஐஓ

print(உயிர்எழுத்துக்கள்[::2])

ஔஒஏஊஈஆ

text = "Reverse"
print(text[::-1])

esreveR

date = "20230722"
year = date[:4]
month = date[4:6]
day = date[6:]
print(f"Year: {year}, Month: {month}, Day: {day}")

Year: 2023, Month: 07, Day

for loops
இது string ஐ தனித்தனியாக தரும்.
vowels= "aeiou"
for x in vowels
print(x)

a
e
i
o
u

Indexing & Slicing

24 July 2024 at 08:20

Indexing & Slicing

String இல் ஒவ்வொரு எழுத்துக்களும் அவற்றிற்கான தனித்தனி இடத்தைக் கொண்டிருக்கின்றன. அதாவது ஒரு string இன் முதலெழுத்து 0 இரண்டாவது எழுத்து 1 என்று தொடர்ச்சியாக செல்கின்றது.

Positive indexing
WELCOME
0123456

Negative indexing
WELCOME
(-7)(-6)(–5)(-4)(-3)(-2)(-1)

txt= "WELCOME"

print(txt[0])

W

print(txt[3])

C

print(txt[5])

5

print(txt[-5])

L

print(txt[-1])

E

அடிப்படை Indexing இன் syntax ஆனது start, stop இரண்டையும் கொண்டிருக்கும்.

string[start:stop]

txt="WELCOME"

print(txt[1:4])

ELC

print(txt[3:]

COME

print(txt[:3])

WEL

print(txt[-6:-2])

ELCO

print(txt[-3:])

OME

Functions - Day 6

21 July 2024 at 18:34

Functions

def my_name("name"):
def என்பது my_name எனும்function ஐ define செய்கிறது.

def welcome():
இந்த function welcome என்ற வார்த்தையை திரும்ப வழங்கும்
return "welcome, how are you ?"

welcome() என்ற function-ஐ call செய்தால், function-ல் return செய்த string print ஆகும்.

மற்றுமொரு எடுத்துக்காட்டு

def name(user_name):
return Welcome +" "+ user_name

print(name(Hiba))
print(name(Shayaan))
print(name(Arham))
print(name(Maisha))
print(name(Ayana))

Welcome Hiba
Welcome Shayaan
Welcome Arham
Welcome Maisha
Welcome Ayana

எ+கா
BMI calculator

def bmi_cal(weight,height)
return weight/ height**2

weight=float(input("Enter Your Weight (kg) :"))

height=float(input("Enter your height (m) :"))

print(f"Your BMI is {bmi_cal(weight,height)}:.2f")

Enter your Weight (Kg) :50
Enter your Height (m) :1.6
your BMI is 19.53

Logical operators - Day 5

19 July 2024 at 05:42

Logical operators

Logical operators என்பது conditional statements ஐ இணைக்க உதவும்.

  • and
  • or
  • not

and
Conditional statements இரண்டும் உண்மையாக இருந்தால் True என்பதை வெளிப்படுத்தும்.

condition1 = True
condition2 = True

print("BANK BALANCE")
user_name = input("USER NAME")
password = int(input("PASSWORD"))
balance = 56765.00

if user_name == "Hiba" and password == 5566:
print(f"Your Balance is {balance}")
else:
print("Something Went Wrong Please Try Again")

or
இரண்டில் ஒரு conditional statements உண்மையாக இருப்பின் True ஐ வெளிப்படுத்தும்.

x = 5
print(x > 3 or x < 4)

True

not
Conditional statements இற்கு எதிரான விளைவைத் தரும். உண்மையாக இருப்பின் False என்றும் பொய்யாக இருப்பின் True என்றும் வெளிப்படுத்தும்.

x = 5
print(not(x > 3 and x < 10))

False

Operators, Conditionals, Input - Day 3 & 4

17 July 2024 at 06:20

Operators

Python இல் கணித செய்கைகளை பயன்படுத்தல்.

  • கூட்டல் (Addition)

num1 = 1 + 2
num2 = 3 + 4

print(num1)

3

print(num2)

7

print(num1 + num2)

10

  • கழித்தல் (Subtract)

num1 = 3-5
num2 = 8-6

print(num1)

2

print(num2)

-2

print(num1)-(num2)

-4

  • பெருக்கல் (Multiply)

num1 = 5 * 4
num2 = 6 * 2

print(num1)

20

print(num2)

12

print((num1)*(num2))

240

  • வகுத்தல் (Division)

num1 = 10/2
print(num1)

5.0

num2 = 14//2
print(num2)

7

  • மீதி (Remainder)

num1 = 15/2
print(num1)

1

Input

Input பயனர்களிடம் இருந்து தகவல்களை உள்ளிட பயன்படும்.

age = int(input())

26

print(age+1)
type(age)

27


age = int(input("Enter your Age")
name = input("Enter your Name")

Enter your Age 2
Enter your Name hiba

எளிய Calculator

print("Simple Calculator")
print("Select Operation")
print("1. Addition")
print("2.Substract")
print("3. multiply")
print("4. Division")
print("5. Modules")
print("6. Exponentiate")

choice = input("Enter Choice 1/2/3/4/5/6")
num1 = float(input("Enter First number"))
num2 = float(input("Enter Second Number"))

if choice == "1":
result = num1 + num2
print(result)

elif choice == "2":
result = num1 - num2
print(result)

elif choice == "3":
result = num1 * num2
print(result)

elif choice == "4":
result = num1 / num2
print(result)

elif choice == "5":
result = num1 % num2
print(result)

elif choice == "6":
result = num1 ** num2
print(result)

else:
print("Option not available")

Data types - Day 2

12 July 2024 at 11:58

Data types

பைத்தானில் 4 வகைத் தரவுகள் உள்ளன. அவையாவன:

  • Numeric data type
  • String data type
  • Boolean data type
  • None data type

Numeric data type

Numeric data type எண்களைக் குறிக்கும். இவற்றை மூன்று வகைப்படுத்தலாம்.

  • Integer - இவை முழு எண்கள் 2, 50, 638, 9743

  • float / decimal- இவை தசம எண்கள், பின்னங்களும் தசமங்களாக மாற்றப்படுவதால் இவற்றில் உள்ளடங்கும். 3.14, 738.244, 13.8

  • Complex Number- சிக்கலெண்கள் அதாவது மெய்யெண்ணும் கற்பனை எண்ணும் சேர்ந்த கூட்டெண்.
    3+3j, 24-2x

Data types ஐ கண்டறிவதற்கு type()ஐ பயன்படுத்தலாம்

type(4.5)

float


type("hello")

str


String

String இரட்டை அல்லது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் (quotation marks) எழுதப்படும் இவற்றில் letters, characters, space, etc… உள்ளடங்கும்.

Type casting

type casting இல் integerஐ string ஆகவும் stringஐ integer ஆகவும் மாற்றலாம்.

int("123")

123


str(231)

"231"


Boolean

True அல்லது False ஆகிய இரு முடிவை மட்டும் தரக்கூடியவை.

Variables

Variable- object, value, data என்பவற்றை குறிக்கின்றது.

Variablesகளை எழுதும் போது
Underscope, characters உடன் ஆரம்பிக்க வேண்டும். குறியீடுகள், எண்களால் ஆரம்பிக்க கூடாது. இறுதியில் எண்களை இடலாம்.

first_name ✅
first1 ✅
_first✅
_firstName✅

First name❌
&first ❌
1first ❌
my-variable❌
str❌

Single Assignment

Text="Hello World"

Multiple Assignment

name, age = hiba, 2

Constants

மாறாத பெறுமதியை கொண்ட variables ஐ constant என்போம். ஆங்கில பேரெழுத்துக்களால் இவை எழுதப்படும்.

PI = 3.14159
MAX_USERS = 100

String & Variables - Day 1

10 July 2024 at 09:56

Python என்பது மக்கள் எளிதில் கற்றுக்கொள்ள கூடிய நிரலாக்க மொழி. இந்நிரலாக்க மொழியை பீலோ கீடோ (Guido van Rossum) என்பவர் 1980 ஆம் ஆண்டுகளில் வடிவமைக்கத் தொடங்கி 1991 ஆம் ஆண்டளவில் வெளியிட்டார். எளிமையான இந்நிரலாக்க மொழி விரைவாக மக்களிடையே பிரபல்யமடையத் துவங்கியது.

python பயன்படுத்தப்படும் துறைகள்

  • இயந்திரக் கற்றல் (Machine Learning)
  • தரவுப் பகுப்பாய்வு (Data Analysis)
  • வலை உருவாக்கம் (Web Development)
  • செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
  • தகவல் பாதுகாப்பு (Cybersecurity)
  • விளையாட்டுகளை வடிவமைத்தல் (Games Development)
  • விஞ்ஞான காட்சிப்படுத்தல் (Scientific Visualization)
  • நிரலாக்கக் கல்வி (Programming Education)

Python மொழி linux OS இல் நிறுவப்பட்டு இருக்கும் windows OS இல் python வலைத்தளத்திற்கு சென்று நாம் நிறுவ வேண்டும்.

Python கற்கத் தொடங்குவோம்.

print() கட்டளை என்பது திரைக்கு அல்லது பிற காட்சிப்படுத்தும் சாதனத்திற்கு செய்தியை அனுப்புவதற்கான எளிய வழியாகும்.

print ("Hello World")

Hello World


என்று திரையில் காட்சிப்படுத்தப்படும்.

1. String & Variables

name = "hiba"
print(name)

hiba


இதில் name என்பது variable ஆகும்
variables ஐ தரவுகளை சேமிக்க பயன்படுத்துகிறோம்.
"hiba" என்பது string. இரட்டை அல்லது தனி மேற்கோள் குறிகளுக்குள் string எழுதப்படும்.
Variables ஐ அச்சிட print()ஐ பயன்படுத்தலாம்.

இந்த codeஐ பயன்படுத்தி, variables இல் சேமித்த தரவுகளை அச்சிடலாம்.

2. Printing Multiple items

Pythonல் பல தகவல்களை அச்சிடும் போது அவற்றை காற்புள்ளிகளால் (commas) பிரிக்கலாம். Python ஒவ்வொரு தகவல்களுக்கும் இடையில் ஒரு இடைவெளியை (space) சேர்க்கும்.

name = 'Hiba'
age = 2
country = "Srilanka"
print("Name : ", name , "Age :" , age , "Country :", country )

Name : Hiba Age : 2 Country : Srilanka


3. Formatted Strings with f-strings

f-string என்பது stringகளை format செய்யும் வழி. string-ஐ f என்ற எழுத்தால் prefix செய்து variable ஐ இரட்டை அடைப்பு குறிகளில் {} எழுத வேண்டும்.

name = "Hiba"
age = "2"
country = "Sri Lanka"
print(f"My name is {name}, I am {age} years old, My Country is {country}")

My name is Hiba, I am 2 years old, My Country is Sri Lanka


4. Concatenation of Strings

கூட்டல் குறியீட்டைப்(+) பயன்படுத்தி stringகளை இணைக்க முடியும்.

greeting = "Good Morning"
name = "Hiba"
print(greeting +" "+ name , end="!")

Good Morning Hiba!


இங்கு ,end=" " விளைவின் இறுதியில் நமக்கு தேவையான குறியீடுகளை அல்லது வேறு தகவல்களை சேர்க்க முடியும்.

அதுபோல் இரு stringஐ வேறாக்க sep="" (separator) ஐ பயன்படுத்தலாம்
எ+கா
greeting = "Good Morning"
name = "Hiba"
print(greeting, name, sep=" ", end="!")

Good Morning Hiba!


5. Using escape sequences

புதிய வரிகளில் ஆரம்பிக்க \n ஐ பயன்படுத்தலாம்
greeting = "Good Morning"
name = "Hiba"
print(greeting, name, sep="\n", end="!")

Good Morning
Hiba!


print("Hello\nWorld\nGood morning")

Hello
World
Good morning


அல்லது
print("""Hello
World
Good morning""")

Hello
World
Good morning


இவ்வாறும் பயன்படுத்தலாம்.

\b (Back space)

print("Hello\bWorld")

HelloWorld


\t (Tab)

a = "Hello\tWorld"
print(a)

Hello World


6. Printing Quotes Inside Strings

Stringகளுக்கு கட்டாயமாக இரட்டை or ஒற்றை மேற்கோள் குறிகள் இட வேண்டும். Stringகளுக்கு இடையில் இரட்டை மேற்கோள் குறிகள் தேவைப்படின்,

print("She Said 'Hello World' ")

She Said 'Hello World'


அல்லது

print('It\'s me Hiba')

It's me Hiba


7. Raw Strings to Ignore Escape Sequences

கணனியில் fileகளின் இடங்களை குறிக்க r ஐ prefix செய்து பயன்படுத்தலாம். இது escape sequence இல் இடம் பெறாது.

print(r"C:\Users\Hiba\Documents\file.txt")

C:\Users\Hiba\Documents\file.txt


கட்டற்ற மென்பொருள்

5 July 2024 at 11:24

தானும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவனே கற்ற கல்வியின் பயனை அடைந்தவன். அறிவை மற்றவர்களுக்கு பகிர்தலே வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நவீன உலகின் வளர்ச்சியில் பங்களிப்பாற்றும் மென்பொருள் பற்றிய அறிவை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் கட்டற்ற மென்பொருள் பற்றிய சிறு பார்வை

மென்பொருள் இருவகைப்படும். ஒன்று கட்டற்றது மற்றயது பொதி/உரிமைத் தராத தனியாருக்கு சொந்தமானது.

கட்டற்ற மென்பொருளானது மென்பொருள் துறையின் அறிவு வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாற்றக் கூடியது அதன் அனுகூலங்களாவன.

  • விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம்
  • திருத்தங்களை வரவேற்க கூடியது. பலர் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
  • அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளல்.
  • பலரது மேற்பார்வையில் இருப்பதால் வழுக்கள் குறைவு.
  • பாதுகாப்பும் அதிகம்.
  • எல்லோராலும் வழுக்களை களைய முடியும்.
  • பதிப்புரிமை இல்லாத நுட்ப சுதந்திரம்.
  • தனி மனித சுதந்திரம்.
  • புதுமைகளை புகுத்த முடியும்.
  • நுட்ப சுதந்திரம்.

தனியாருக்கு சொந்தமான பொதி உரிமை தராத மென்பொருளின் பிரதிகூலங்களாவன.

  • எமது விருப்பங்களுக்கேற்ப மாற்ற முடியாது.
  • ஒரு சிலரே சரி பார்க்க முடியும்
  • அறிவை பகிர்ந்து கொள்ளாமை.
  • வழுக்கள் அதிகம்
  • பாதுகாப்பு குறைவு
  • குறிப்பிட்ட சிலரே வழுக்களை களைய முடியும்.
  • பதிப்புரிமை பெற்றது
  • தனி மனித சுதந்திரம் இல்லை. புது நுட்பங்களை புகுத்த முடியாது.

மென்பொருள் விடுதலை

மென்பொருள் என்பது அறிவும் அறிவியலும் ஆகும். மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமானது தனிநபர்களுக்கு மட்டும் உரித்துடையது அல்ல.

தனியுரிமை பெற்ற மென்பொருட்கள்

  1. தனி நிறுவனத்திற்கு சொந்தமானவை.
  2. பொதியாக மட்டுமே கிடைக்க கூடியவை.
  3. பயனருக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு.
  4. பகிரக்கூடாது.
  5. மாறுதல்கள் செய்ய முடியாது.

கட்டற்ற மென்பொருட்கள்
பொதுப்பயன்பாட்டு உரிமம் (GPL)தரும் இலவச 4 உரிமைகள்

  1. எங்கும் எவரும் பயன்படுத்தலாம்.
  2. தேவைக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
  3. விலைக்கோ, விலையின்றியோ பகிரலாம்.
  4. மாற்றங்களோடு மூலநிரலையும் பகிர வேண்டும்.

கட்டற்ற மென்பொருள் என்பது இளைய தலைமுறைக்கான அறிவுப்புதையல். திறமையான மாணவ சமூகத்தை உருவாக்க கூடியது.

கட்டற்ற மென்பொருளும் வியாபாரமும்

  • சேவை
  • நிறுவுதல்
  • ஆதரவு
  • கல்வி
  • மாற்றம் செய்தல்
  • வழங்கல், விற்றல்.

GNU ( GNU not unix)

Ensure 4 freedoms use for any purpose study and adapt (modify) distribute either or free gratis distribute the modified source.

Unix family tree

GNU இனால் செய்யக்கூடியவை

GNU

  • Compilers
  • Editors
  • Language
  • Network tools
  • Server
  • Database
  • Device Driver
  • Desktop utilities
  • Multimedia Apps
  • Games
  • Office
  • Application and more…

பணம் உள்ளவன் மேலும் பணக்காரனாக வேண்டும். ஏழை சாகும் வரை ஏழையாக இருப்பான் அதுவே தனியார்மயமாக்கலின் சூத்திரம். விலை உயர்ந்தவை மட்டுமே மதிப்புமிக்கதாக பார்க்கப்படும் இச்சமூகத்தில் சமூக நலனுக்காக இலவசமாக தரப்படுபவை மக்களிடம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

மென்பொருட்களிலும் அவ்வாறே. Windows OS, Mac OS போன்ற அதிக விலை கொடுத்து தனியாரிடம் எமது சுதந்திரம் பறிக்கப்பட்டு வாங்கும் பொருட்களே நல்லவைகளாக கருதப்படுகின்றன. மக்களின் தேவையறிந்து சமூக நலன் விரும்பிகளால் உருவாக்கப்பட்ட கட்டற்ற மென்பொருட்களின் கீழ்வரும் Linux Operating System பற்றி பார்க்கலாம்.

Linux OS

Linux ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்?

  • வைரஸ்களை மறந்துவிடலாம்.
  • நிலையான பழுதுபடாத கணனி.
  • முழு பாதுகாப்பு.
  • பணம் தந்து வாங்கவேண்டியதில்லை.
  • பல்லாயிரகணக்கான மென்பொருட்கள்.
  • தொடர்ந்த மேம்பாடு.
  • மென்பொருட்கள் திருட்டு இல்லை.
  • பழைய கணனிக்கும் உயிர்தரலாம்.
  • உலகெங்கும் இருந்து இலவச உதவிகள்.
  • குறைகளை புகார் செய்யலாம்.

வைரஸ் உள்ள windows apps linux இல் இயங்காது.
Github இல் பல வகைப்பட்ட மென்பொருடகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

Jobs in open Source

  • Administration
  • Development
  • Support
  • Embedded Systems
  • Entrepreneurship

Domains

  • Bio Informatics
  • Computer Network
  • Gaming Industries
  • Embedded Systems
  • Operating System
  • Research
  • Service Industry
  • System Development
  • System/ network
  • Administration
  • Training
  • Tele Communication

Industry using FOSS

❌
❌